வல்லம் மாநாட்டில் ஷம்சுல்லுஹாவும் சைட்டில் பி.ஜே.யும் வெளியிட்டுள்ள வரலாறு உண்மையா?

J.A.Q.H. சார்பில் லுஹா  மீது பிராத்தல் மற்றும் விஸா மோசடி  புகார் கொடுத்தது உண்மையா? 

J.A.Q.H.  மேலப்பாளையம் கிளைச் செயலாளர் 5.12.2005ல்  வெளியிட்ட தன்னிலை விளக்க  நோட்டீஸிலிருந்து. வரலாறு தெரியாத வரலாறு இல்லாதவர்களுக்காக தந்துள்ளோம். பள்ளித் திருடர்கள்  திருடிய பள்ளியின் பத்திரக் காப்பியுடன்.
                
 பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.                       

கண்ணியத்திற்குரியவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

2-12-2005 அன்று ஜும்ஆவில் பேசிய லுஹா தன் மீது பிராத்தல் மற்றும் விஸா மோசடி என பொய் புகார் கொடுத்துள்ளதாக கூறி மக்களின் அனுதாபத்தை பெற முயன்றுள்ளார். எனவே நாம் இந்த விளக்கத்தை வெளியிடுகிறோம். 

மேலப்பாளையத்தில் குர்ஆன் ஹதீஸ் பிரச்சாரம் செய்ய 1986ல் துவங்கப்பட்டதுதான் இஸ்லாமிய தவ்ஹீத் இயக்கம். அதை துவங்கியவர் கா.அ. முஹம்மது பழுலுல் இலாஹி என்பது 37 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தெரியும். 

குர்ஆன் ஹதீஸ் பிரச்சாரத்தை தமிழக அளவில் இணைந்து செய்ய  1987ல் துவங்கப்பட்டதுதான் J.A.Q.H.   இது துவங்கப்பட்டதும் ஒரே தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என்ற நன் நோக்கில் அனைவரும் அதில் இணைந்தோம். 

1989ல் அது ரிஜிஸ்டர்  செய்யப்பட்டது. அப்பொழுது முதல்  அமீராக இருந்து வரும் எஸ். கமாலுத்தீன் மதனி அவர்களின் சீரிய தலைமையில்; தமிழகம் முழுவதும் J.A.Q.H.  சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. 

மேலப்பாளையம் கிளை அமீராக இருந்த காலித் ஸாஹிப்(றஹ்) தலைமையில் 4-8-91 அன்று இலாஹி இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் இந்த அமைப்புக்காக மேலப்பாளையம் பகுதிக்கு ஒரு மர்க்கஸ் கட்ட வேண்டும். அதற்கு மஸ்ஜிதுர்றஹ்மான் என பெயரிட வேண்டும். அதற்காக மஸ்ஜிதுர்றஹ்மான் அமைப்புக் குழு - பவுண்டேஷன் கமிட்டி அமைக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. 

பதவிக்காக 1991லேயே பிரச்சனை செய்ய ஆரம்பித்து விட்டார்.

மஸ்ஜிதுர்றஹ்மான் பவுண்டேஷன் கமிட்டி தலைவராக மவுலவி நிஜாமுத்தீன், செயலாளராக கா.அ. முஹம்மது பழுலுல் இலாஹி, பொருளாளராக கூலி இக்பால் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டார்கள். 

கமிட்டி உறுப்பினர்களாக K.A  காலித் ஸாஹிப்(றஹ்), M.M. சிபகதுல்லாஹ், T.S. சேக் மன்சூர், K.M. அப்துல் காதர், K. முஹம்மது ஸலாஹுத்தீன்(றஹ்) K.S. ரசூல் மைதீன், M.M. ஷாகுல் ஹமீது(றஹ்) K.S..  ஷாகுல் ஹமீது, T.A. காஜா மைதீன் ஆகிய 9 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். 

இவர்கள் அனைவருமே கடுமையான எதிர்ப்புகளிடையேயும் 1986முதல் கொள்கையில் உறுதியாக இருந்து வந்தவர்கள். 4-8-91ல் நடந்த இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாததினால் கலந்து கொள்ளாத கா.அ. முஹம்மது பழுலுல் இலாஹி போன்றவர்கள் மஸ்ஜிதுர்றஹ்மான் பவுண்டேஷன் கமிட்டி பொறுப்பாளர்களாகவும் உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 

ஆனால் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட லுஹா சாதாரண உறுப்பினராகக் கூட தேர்வு செய்யப்படவில்லை. எனவே நான் ஒரு மவுலவியாக இருந்தும் என்னை ஏன் எதற்கும் தேர்வு செய்யவில்லை| என பதவிக்காக 1991லேயே பிரச்சனை செய்ய ஆரம்பித்து விட்டார். 

வேலை தேடி சவூதி சென்ற லுஹா மினிட் புக்கை ஒப்படைக்காமல் சென்று விட்டார்.

1986 ஏப்ரலில் அந்நஜாத் துவங்கும் வரை சுன்னத் ஜமாஅத் மதரஸாவில் வேலை செய்து வந்தார் லுஹா. (சுன்னத் ஜமாஅத் மதரஸாவில் தரும் தரும் அதே சம்பளம் தந்தால் தவ்ஹீது பிரச்சாரம் செய்வோம் என்று சம்பளம் பேசி வந்தவர்களில் லுஹாவும் ஒருவர்) அந்நஜாத் துவங்கியதும் துணை ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார்.  

மாதத்தில் 20 நாள் மட்டுமே வேலை செய்ய 750ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது. 3மாதம்தான் வேலை செய்திருப்பார், வண்டலூர் சுன்னத் ஜமாஅத் பள்ளியில் பேஷ் இமாம் வேலைக்கு 1000 ரூபாய் சம்பளம் என்ற தகவல் கிடைக்கிறது.

உடனே அந்த சுன்னத் ஜமாஅத் பள்ளியில் போய் வேலைக்கு சேர்ந்து சுன்னத் ஜமாஅத் முறைப்படி  மத்ஹபு அடிப்படையில் தொழுகை நடத்த ஆரம்பித்து விட்டார். 

கொள்கை மாறிப் போய் ஏன் வேலை செய்கிறீர்கள் நாங்கள் அந்த சம்பளம் தருகிறோம் மேலப்பாளையம் வந்து பிரச்சாரகராக இருங்கள் என்று அழைத்தோம். அப்பொழுது ஊரிலிருந்த எதிர்ப்புகளுக்கு பயந்த லுஹா வர மறுத்து விட்டார். 

1990க்குப் பிறகு கோட்டாறு தவ்ஹீது பள்ளியில் (சுன்னத் ஜமாஅத் பள்ளியைவிட 500 கூடுதலாக கிடைக்கிறது என்றதும்) 1500ரூபாய் சம்பளத்திற்கு பேஷ் இமாமாக வேலைக்குச் சேர்ந்தார். எனவே அவருக்கு பொறுப்பு வழங்க யாரும் விருப்பவில்லை. நான் ஒரு மவுலவி ஆகவே எனக்கு ஏதாவது பதவி தர வேண்டும் என பதவியை வாய் விட்டு கேட்க ஆரம்பித்து விட்டார் லுஹா. 

5-4-92 அன்று பழுலுல் இலாஹி மச்சான்  R.S.  முஹம்மது காஜா தலைமையில் கூட்டம் நடந்தது.  கா.அ. முஹம்மது பழுலுல் இலாஹி, நிஜாமுத்தீன் ஆலீம் போன்றவர்களின் பரிந்துரையால் லுஹாவுக்கு செயலாளர் பதவி வழங்கப்பட்டது. செயலாளர் பதவி பெற்ற குறுகிய காலத்திலேயே வேலை தேடி சவூதி சென்று விட்டார் லுஹா. வேலை தேடி சவூதி சென்ற லுஹா மினிட் புக்கை ஒப்படைக்காமல் சென்று விட்டார். 

பத்திரம் J.A.Q.H.  ஜமாஅத்திற்காக என தெளிவாக உள்ளது.

மேலப்பாளையத்தில் இடம் வாங்குவதற்காக அமீர் எஸ். கமாலுத்தீன் மதனி அவர்கள் தந்த பரிந்துரை கடிதம் மூலம் பவுண்டேஷன் கமிட்டி வசூல் செய்தது. அல்லாஹ்வின் பேரருளால் 11. A.  ராவுத்தர் கீழத் தெரு இடத்தின் ஒரு பகுதியை 27-10-93 அன்று அசன் பாத்திமா அவர்களிடமிருந்து வாங்கப்பட்டது. 



இன்னொரு பகுதியை 31-1-94 அன்று ரவுபா, மும்தாஜ் ஆகியவர்களிடமிருந்தும் J.A.Q.H. மேலப்பாளையம் கிளை மர்க்கஸுக்காக வாங்கப்பட்டது.




அப்பொழுது J.A.Q.H. மேலப்பாளையம் கிளை தலைவராக இருந்த கா.அ. முஹம்மது பழுலுல் இலாஹி, செயலாளராக இருந்த நிஜாமுத்தீன், பொருளாளராக இருந்த சிபகதுல்லாஹ் ஆகியவர்கள் பெயரால் இடம் வாங்கினோம். 

மேலப்பாளையத்தில் குர்ஆன் ஹதீஸ் பிரச்சாரம் செய்ய யாருடைய பொருளாதாரம் அதிகமாக பயன்பட்டதோ அவருடைய பொருளாதாரம்தான் இடம் வாங்கவும் பயன்பட்டது என்பதை 37 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அறிவார்கள். 

அமைப்பு பெயரால் வசூல் செய்து தனி நபர் பெயரால் இடம் முடிக்கும் மோசடி பேர்வழிகளின் வேலையை அவர்கள் செய்யவில்லை. முறையாக J.A.Q.H. ஜமாஅத்திற்காக என பத்திரம் எழுதினார்கள். எனவே பத்திரம் J.A.Q.H. ஜமாஅத்திற்காக என தெளிவாக உள்ளது. 


பதவி பெற்ற போது கொண்டு போய் விட்ட மினிட்.

1994ல் சவூதியிலிருந்து கேன்சலான லுஹா தயாகம் திரும்பினார். மீண்டும் சவூதி செல்ல விஸா இல்லாததாலும் இன்னும் சில காரணங்களாலும் லுஹா J.A.Q.H. மேலப்பாளையம் கிளையில் வேலை கேட்டார்.

அப்பொழுது மஸ்ஜிதுர்றஹ்மான் கட்டிட வேலை துவங்க இருந்ததால் கட்டிடப் பணிகளை மேற்பார்வை செய்யும் பொறுப்பாளராகவும் பிரச்சாரகராகவும் பொதுச் செயலாளரால் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களிலேயே லுஹா J.A.Q.H.மேலப்பாளையம் அமீர் (தலைவர்) பதவி தனக்கு வேண்டும் என்று  கேட்க ஆரம்பித்து விட்டார். இந்நிலையில் அன்றைய அமீர் K.A. காலித் ஸாஹிப்(றஹ்) அவர்கள் லுஹா மீது ஊழல் குற்றச்சாட்டு கூற ஆரம்பித்து விட்டார்கள்.

லுஹா தலைவர் பதவி கேட்பதால் தான் காலித் ஊழல் குற்றச்சாட்டு கூறுகிறார் என்று திசை திருப்பினார்கள். சுய நல நோக்கோடு லுஹா பதவி கேட்பதை புரியாத அப்பாவிகள் லுஹாவுக்கு தலைவர் பதவி கொடுக்க வேண்டும் என்று பரிந்து பேச ஆரம்பித்து விட்டார்கள்.

11-5-97 அன்று நடந்த கூட்டத்தில் லுஹாவுக்கு தலைவர் பதவி கொடுக்க வேண்டும் என்று  கூட்டத் தலைவர் K.S. ரஹ்மதுல்லாஹ் இம்தாதி அவர்கள் ரொம்பவும் முயற்சித்தார்கள். இறுதியில் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.

5-4-92ல் லுஹா பதவி பெற்ற போது கொண்டு போய் விட்ட மினிட்புக்கை 11-5-97ல் பதவி பெறும்போதுதான் கொண்டு வந்தார்.


காலித் ஸாஹிப் (றஹ்) கையெழுத்துப் போட மறுத்து விட்டார்.

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி விட்ட ஒருவருக்கு அது தெளிவு படுத்தப்படாத நிலையில் அமைப்பில் பொறுப்பு வழங்குவதை மாநில தலைமை விரும்பவில்லை. எனவே 11-5-97 அன்று தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு தீர்மானத்தை மாநில தலைமை அங்கீகரிக்கவில்லை.

18-5-97 அன்று மாநில அமீர் கிளைக்கு எழுதிய கடிதத்தில் பழைய நிர்வாகிகளே நீடிக்க வேண்டும் என்று கூறி விட்டார். எனவே கோபம் அடைந்த லுஹா கோஷ்டி சேர்க்க ஆரம்பித்ததுடன் ஜும்ஆ மேடையில் கீழ்தரமாகவும் பேச ஆரம்பித்து விட்டார்.

ஆகவே லுஹா மீது நடவடிக்கை எடுக்க இருந்தோம். அந்த நேரத்தில் லுஹா 3 கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விட்டார்.  லுஹா கைதாகி விட்டதால் நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டது.

10-10-98ல் திடீரென்று கூட்டப்பட்ட J.A.Q.H. நிர்வாகிகள் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் லுஹா பள்ளி கட்டிட கணக்கு காட்டினார். 1-6-95முதல் 9-10-98 வரையிலான கணக்கு சரி பார்க்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது என்ற தீர்மானத்தை இன்று ஏகத்துவம்| பத்திரிக்கையில் துணை ஆசிரியராக வேலை செய்யும் செய்யது இபுறாஹீம் தனது கைப்பட எழுதி கையெழுத்துக் கேட்டார்.

லுஹா காட்டிய மூன்றரை வருட கணக்கை விரிவாக பார்வை செய்ய அனுமதிக்கவில்லை. விரிவாக பிறகு பாருங்கள் இப்பொழுது கையெழுத்து போடுங்கள் என்று கூறி மற்றவர்களிடம் கையெழுத்து வாங்கினார்கள்.

இது கள்ளக் கணக்கு விரிவாக பார்க்காமல் நான் கையெழுத்து போட மாட்டேன் என்று கூறி காலித் ஸாஹிப்(றஹ்) கையெழுத்துப் போட மறுத்து விட்டார். மூன்றரை வருட கணக்கு காட்டப்பட்ட அந்தக் கூட்டத்தை அரை மணி நேரத்திலேயே முடித்து விட்டார்கள்.

லுஹா செய்துள்ள பல்வேறு மோசடிகள், சதிகளுக்குரிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

லுஹா காட்டியது ஊழல் கணக்கு என்பதால் காலித் ஸாஹிப்(றஹ்) சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க முயற்சிகள் மேற்கொண்டார் அப்போதெல்லாம் சமாதான பேச்சு வார்த்தை எனும் பெயரால் திறமையான முறையில் ஏமாற்றி காலத்தை கடத்தி வந்துள்ளார் சம்சுல் லுஹா.

எனவே, நான் கிளைச் செயலாளராக பொறுப்பேற்ற பின் சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் இனியும் சமாதான பேச்சு வார்த்தைகள் எனும் பெயரால் சம்சுல் லுஹா காலம் கடத்த முயற்சிக்கும் சதி வலையில்  வீழ்ந்து ஏமாந்து விடக் கூடாது என்றும் J.A.Q.H. மேலப்பாளையம் கிளையினர் வற்புறுத்தியுள்ளார்கள்.

1994ல் நம்மிடம் வேலைக்கு சேர்ந்த போது லுஹா சிறிய தந்தையின் குடும்பத்தாருடன் ஒட்டுக் குடி இருந்தார். சிறிய தந்தையின் குடும்பத்துக்கு பாகப் பணம் கொடுத்து வெளியேற்றி விட்டார்.

அவரது சகோதரர்களுக்கும் பாகப் பணம் கொடுத்து வெளியேற்றி விட்டார்.

லுஹாவின் அன்றைய பொருளாதார நிலை என்ன? இன்றைய பொருளாதார நிலை என்ன? என்று பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டு வைக்கவில்லை. லுஹா செய்துள்ள பல்வேறு மோசடிகள், சதிகளுக்குரிய தகுந்த ஆதாரங்கள் எனக்கு கிடைத்துள்ளன.

பள்ளி கட்டட நிதி வசூலித்து மோசடி செய்துள்ளார்.

மஸ்ஜிதுர்றஹ்மான் பவுண்டேஷன் கமிட்டி என்ற கணக்கை தனது சதி திட்டத்தால் குளோஸ் செய்துள்ளார். பள்ளி கட்டிடப் பணிக்காக J.A.Q.H.. அவ்வப்போது கம்சுல் லுஹாவிடம் பணம் கொடுத்து வந்தது. சம்சுல் லூகாவிடம் கொடுத்த பணத்திற்கு எழுதி வாங்கப்பட்ட வவுச்சர்களை முந்தைய நிர்வாகிகள் பயில்களில் சேர்த்து வைத்து வந்துள்ளார்கள்.

அந்த பைல் பள்ளியில் இருந்துள்ளது. J.A.Q.H.ல் சம்சுல் லுஹா பெற்ற பணத்திற்குரிய ஆதாரங்களை இல்லாமல் ஆக்கும் நோக்குடன் பள்ளியிலிருந்த அந்த வவுச்சர்களை லுஹா திருடிச் சென்றுள்ளார்.

மஸ்ஜிதுர்றஹ்மான் கட்டிடப் பணிக்கான முழுமையான பணத்தையும் J.A.Q.H. கொடுத்து வந்திருக்கவே MASJIDUR RAHMAN EXECUTIVE COMMITTEE   எனும் பெயரில் போலி கமிட்டி அமைத்தும்; பள்ளி கட்டட நிதி வசூலித்து மோசடி செய்துள்ளார்.

லுஹா உருவாக்கிய இந்த  போலி கமிட்டியில் கூட பொருளாளர் பொறுப்பு என்பது வெறும் பெயர் அளவில்தான் இருந்துள்ளது. போலி கமிட்டியின் வரவு செலவுகள் யாவையும் லுஹாவும் லுஹாவின் மோசடிக்கு துணை நின்றவர்களும்தான் கவனித்து வந்துள்ளனர்.

லுஹாவால் கணக்குகளை சரியாக பராமரிக்க இயலவில்லை.

இதற்கு பி.ஜைனுல் ஆபிதீன் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள கடித ஆதாரமும் உள்ளது. அதில், வரவு செலவுகள் அனைத்து நிர்வாகிகளுக்கும் தெரிந்து நடக்கவில்லை. பள்ளிவாசல் நிதியை பள்ளிவாசல் அல்லாத பணிகளுக்கு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. அவ்வப்போது கணக்குகள் சரி செய்யப்படாததால் லுஹாவால் கணக்குகளைச் சரியாக பராமரிக்க இயலவில்லை என்று பி.ஜே. எழுதியுள்ளார்.

பொருளாளர் போன்ற மற்ற நிர்வாகிகளை லுஹா பெயரளவில் வைத்திருந்துள்ளார். பொருளாதாரத்தையும் கணக்கையும் லுஹா தன் கைவசமே வைத்திருந்துள்ளார். அந்த கணக்குகளை லுஹா சரியாக பராமரிக்கவில்லை. இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்திற்கும் பி.ஜே.யின் இந்தக் கடிதமும் ஆதாரமாகும்.

(பள்ளி பொருளாளர்  பள்ளிக்கு வரும் பணம் பொருளாளராகிய  என்னிடம் தராமலும் பேங்கில் போடாமலும் லுஹா தன் கையில் வைத்து செலவு செய்கிறார். பள்ளிப் பணத்தை அல்லாத வகைக்கு செலவு செய்கிறார் என்று  இந்தக் கடிதத்தை நிர்வாகக் குழுவில் படித்துக் காட்டி கணக்குக் கேட்டார். லுஹாவோ கணக்குக் காட்டாமல் நெஞ்சில் அடித்து அழுதுள்ளார்)


லுஹாவின் ஊழல் தட்டிக் கேட்கப்பட்டதால்தான் லுஹா உருவாக்கிய அந்த போலிக் கமிட்டியும் உடைந்தது என்பது ஊரறிந்த ரகசியமாகும்.

பல வகைகளிலும்  வசூல் செய்து மோசடி செய்து வந்துள்ளார்.

இந்த போலி கமிட்டி பெயரால் வெளிநாடுகளுக்கு கடிதம் எழுதிய கம்சுல்லுஹா ரூபாய் 10 இலட்சத்துக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக அறிகிறோம்.

சம்சுல் லுஹா வெளிநாட்டில் வாழ்பவர்களிடமும், வெளிநாட்டவர்களிடம் வசூல் செய்ததற்குரிய ஆதார ரசீதுகளில் சில நமக்கு கிடைத்துள்ளன. அவரது வெளிநாட்டு வசூல் மோசடிக்கு அவரது தம்பி காஜாவையும் பயன்படுத்தியுள்ளார்.

துபை யு.ஏ.இ.யில்  உள்ளவர்கள் லுஹா தம்பி காஜா இடம் நிதி வழங்க வேண்டும் என்று பத்திரிக்கையிலும் விளம்பரம் செய்துள்ளார். அனுப்பிய பணத்திற்கு ரசீது அனுப்பாமல் பணம் பெற்றுக் கொண்டதாக லட்டர் பேடில் சம்சுல் லுஹா பதில் அனுப்பியுள்ள ஆதாரங்களும் நமக்கு கிடைத்துள்ளன.

THAWHEED JAMATH என்ற பெயரிலும் பேங்கில் கணக்கு துவங்கி அதற்கும் நமது மர்க்கஸ் முகவரியையே பயன்படுத்தி வருகிறார். இது மாதிரி இன்னும் பல வகைகளிலும்  வசூல் செய்து மோசடி செய்து வந்துள்ளார்.

நமது அமைப்பின் பெயருக்கு முன்னால் மேலப்பாளையம் என்ற பெயரைச் சேர்த்து M.J.A.Q.H.  என்று குழப்பமான பெயரில் ஆங்கிலத்திலும்  தமிழிலும் லட்டர் பேடு அடித்து அதன் அரபி வாசகத்தில் ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் என்று நமது பெயரை மட்டும் போட்டு வசூலித்து வந்துள்ளதற்குரிய ஆதாரங்களும் கிடைத்துள்ளன.

மஸ்ஜிதுர்-றஹ்மான் கட்டட வளர்ச்சி நிதி ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ், 20 அத்தியடி கீழத் தெரு எனும் பெயரில் வசூலித்துள்ளதற்கும் ஆதாரம் கிடைத்துள்ளது.

நடத்தாத மாநாட்டு பெயரால் நடத்திய வசூல் மோசடி.

1994 டிசம்பர் 17,18 ஆகிய தேதிகளில் நமது J.A.Q.H.    சார்பில் நடத்த இருந்த மாநாட்டைத்தான் 1995 ஜனவரி 21,22 ஆகிய தேதிகளில் நடத்தினோம். 1994 டிசம்பர் 17,18 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சார்பில் மாநாடு நடத்த இருப்பதாகக் கூறி 14. பஷீர் அப்பா தெரு என்ற அவரது வீட்டு முகவரியை பயன்படுத்தி நன்கொடை கேட்டு வெளிநாடுகளுக்கு லுஹா கடிதம் எழுதியள்ள ஆதாரங்களும் கிடைத்துள்ளன.

ஒரே தேதியில் ஒரே விஷயத்திற்காக அனுப்பப்பட்ட கடிதத்தில் இரு விதமாக கையெழுத்திட்டுள்ளார். அதில் சில மவுலவிகளை பொறுப்பாளர்களாக போட்டுள்ளார்.

அந்த மவுலவிகளை அணுகி கேட்டபொழுது அப்படி ஒரு அமைப்பு இருந்ததே எங்களுக்குத் தெரியாது என்றும் அப்படி ஒரு மாநாடு நடக்கவில்லை என்றும் கூறி விட்டனர். நடத்தாத மாநாட்டு பெயரால் நடத்திய வசூல் மோசடி இது.

இதன் மூலம் சம்சுல் லுஹா அப்பொழுதே போர்ஜரியாக இருந்துள்ளார் என்று விளங்க முடிகிறது. மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து ஆதாரங்களையும் இணைத்துதான் போலீஸில் கம்ளைண்ட் செய்தோம்.

ஆதாரங்களின் அடிப்படையில்தான் போலீஸார் விசாரணைக்காக கூட்டிச் சென்றனர். மேடை போலீஸ் ஸ்டேஷன் மேலே படி ஏற முடியாது, நான் நோயாளி, எனக்கு மயக்கம் வருகிறது என்று கூறி படியிலிலேயே இருந்து கொண்டு இட்லி வாங்கி கேட்டு சாப்பிட்டுள்ளார் லுஹா.  

நீங்களா பாய் போங்கள் என்று சொல்லி விட்டதாக கூறுவதெல்லாம் பொய்.

சமுதாய உரிமையை பெறுவதற்க்காகக் கூட பஸ் மறியல் செய்வது ஹராம் என பிரச்சாரம் செய்தவர்கள். மோசடியாளரை விடுதலை செய்யா விட்டால் பஸ்ஸை மறிப்போம், எரிப்போம் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்துவோம் இது டிசம்பர் 6ல் எதிரொலிக்கும் என மிரட்டியுள்ளார்கள்.

வீடு தேடி வந்துதான் போலீஸ் லுஹாவை பிடித்துச் சென்றது. ரோட்டில் போகும்போது பிடித்து விட்டதாகவும், லுஹாவிடம் போலீஸார் ஒரு லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் காவல் துறை தலைமைக்கு பொய் புகார் அனுப்பியுள்ளனர்.

முபாஹலா இல்லை என போலீஸில் எழுதி கொடுத்து விட்டு, காத்திருந்ததாக பொய்ச் செய்தி வெளியிட்ட பொய்யர்கள்தான் இவர்கள். இந்த பொய்யர்களை அறியாத காவல் துறை தலைமை அதிகாரிகள் இவரை தற்காலிகமாக வெளியே விட்டுள்ளனர்.

லுஹாவை பார்த்தவுடன் நீங்களா பாய் போங்கள் என்று சொல்லி விட்டதாக கூறுவதெல்லாம் பொய். காவல்துறை நண்பர்கள் போல் நடித்துக் கொண்டு காவல் துறை அதிகாரிகள் மீது பொய்ப் புகார் கூறித் திரியும் இந்த போர்ஜரிகளையும் கிரிமினல்களையும் மோசடியாளர்களையும் காவல் துறை விரைவில் அடையாளம் கண்டு கொள்ளும் இன்ஷாஅல்லாஹ்.

காவல் துறையில் நாம் புகார் கொடுத்த பிறகு இன்னும் பல ஆதாரங்களும் கிடைத்துள்ளன. லுஹா நன்கொடை கேட்டு அரபிகளுக்கு அரபியில் கடிதம் எழுதியுள்ள கடித ஆதாரங்களை அனுப்புவதாக அரபகத்திலுள்ளோர் தகவல் தந்துள்ளனர்.

மஸ்ஜிதுர்றஹ்மான் பெயரால் லுஹா அரபியிடம் சம்பளம் வாங்கியுள்ளார் என்பது உட்பட இன்னும் பல ஆதாரங்களை அனுப்புவதாகக் கூறியுள்ளனர் அனைத்தையும் சேகரித்து தக்க இடத்தில் நாம் சமர்ப்பிப்போம். இன்ஷா அல்லாஹ். வஸ்ஸலாம்.
இப்படிக்கு:
M.A.S. செய்யது அஹமது ஸலபி
செயலாளர்:- J.A.Q.H.   மேலப்பாளையம் கிளை,
மஸ்ஜிதுர் றஹ்மான்,
11.A. ராவுத்தர் கீழத் தெரு, மேலப்பாளையம்.

http://mdfazlulilahi.blogspot.ae/2017/11/blog-post_14.html 

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.