ஜெயலலிதா அவர்களின் மழை நீர் சேமிப்பு திட்டம் இஸ்லாம் காட்டிய வழிதான்

கொடுங்கையூர் நஸ்ருதீன் வாட்ஸப் குரூப்பில் Ameer Aarif என்ற சகோதரர் கடுமையான தண்ணீர் பஞ்சம் என்ற தலைப்பில்  அறிவுரைகளை எழுதி இருந்தார்கள். அதில் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே நாம் செயல்படுத்தி வருவதும் அறிவுரையாக இடம் பெற்று இருந்தது. 10 ஆண்டுகளுக்கு முன்னரே நாம் செயல்படுத்தி வருவதை படத்துடன் வாட்ஸப்பில் பதிவு செய்தோம். அதே நேரத்தில் இன்னொன்றையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம்.




2001ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த  மாண்புமிகு முன்னால் முதல்வர்  ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அ.தி.மு.க. அரசு கட்டாய மழைநீர் சேகரிப்புத் திட்டம் கொண்டு வந்தது. அதைக்  சட்டமாகவும் ஆக்கியது. 

இந்த  சட்டத்தின்படி அனைத்து வீடு மற்றும் அனைத்து கட்டடங்களும் கட்டயாமாக மழைநீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும். தேவைப்படுவோர்க்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கிக் கொடுக்கும். தவறினால் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புத் துண்டிக்கப்படும். இப்படி கடுமையான சட்டமும் போட்டது.


இதனால் ஏற்பட்ட பயன்  அடுத்த ஐந்து ஆண்டுகளில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் 50 சதம் வரை நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. நிலத்தடி நீரின் தரமும் உயர்ந்தது. 

வானத்திலிருந்து அளவோடு தண்ணீரை இறக்கினோம். அதைப் பூமியில் தங்க வைத்தோம் என்று அல்குர்ஆனில்  (23:18 )  அல்லாஹ் கூறி உள்ளான். 


அல்லாஹ்வின் அருளால் பொழிகின்ற மழை நீரை பூமி உறிஞ்சி தேக்கி வைக்கும். அதற்கு தக்கவாறு நமது நாட்டையும் வீட்டையும் நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த அருமையான வழிகாட்டுதலை இந்த வசனத்தின் மூலம் அல்லாஹ் கூறி உள்ளான். 


50 ஆண்டுகளுக்கு முன்பு வரை கட்டப்பட்ட வீடுகளில் முற்றம் என்று ஒன்று இருந்தது. மழை பெய்தால் வீட்டின் நாலாபுறத்திலிருந்தும் தண்ணீர் அந்த இடத்தில் வந்து விழும். எவ்வளவு பெரிய பங்களாவாக, அரண்மனையாக இருந்தாலும் அந்த தரை மட்டும் மண்ணாகத்தான் இருந்தது. 

மழைநீர் சேகரிப்பு என்பது 1400 ஆண்டுகளுக்கு முன்னாலேயே இஸ்லாம் காட்டிய வழி. அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. இது அம்மாவின் திட்டம் அல்ல அல்லாஹ்வின் திட்டம் என்பதை விளக்க வேண்டியவர்கள். இதை பயன்படுத்தி இஸ்லாத்தை ஆட்சியாளர்களுக்கும். எதிர் கட்சியினருக்கும் எத்தி வைக்க கடமைப்பட்டவர்கள். என்ன செய்தார்கள்.? ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர் கட்சி எதிர்க்கிறது. ஆகவே கூட்டணி தர்மப்படி நாமும் எதிர்ப்போம் என்று எதிர்த்தார்கள். 

நபி(ஸல்) அவர்கள் யூதர்களுடனும் கிறிஸ்தவர்களுடனும் கூட்டணி வைத்து இருந்தார்கள். அது மாதிரிதான் கூட்டணி என்கிறோம். அப்படியானால் அது தொகுதி உடன்பாடு என்ற அடிப்படையிலான கூட்டணியாகத்தான் இருக்க வேண்டும். கொள்கைக் கூட்டணியாக மாறக் கூடாது. நபி(ஸல்) அவர்கள் மற்றவர்களுடன் கொள்கைக் கூட்டணி வைக்கவே இல்லை. குர்ஆன் ஹதீஸ்களுக்கு மாற்றமான விஷயங்களில் கூட்டணி தர்மப்படி ஆதரிப்போம் என்ற முடிவுக்கு வரவே கூடாது. அது நமது ஈமானை பாழ்படுத்தி விடும். மறுமை வாழ்வை நஷ்டப்படுத்தி விடும். இதை கவனத்தில் கொண்டு செயல்படுவோமாக. மழை நீரை சேமிப்போமாக.


கடுமையான தண்ணீர் பஞ்சம்  தமிழ்நாட்டில்.... தண்ணீர் இரணம் என்பார்கள் எங்களின் முன்னோர்கள் .. நிலத்தடி நீரும் மிக மிக ஆழத்தில் போய் விட்டது  சென்னையில் ஏரிகள் வறண்டு விட்டது மக்கள்.மிகவும் நீருக்கு அலைகிறார்கள்.. ஆகவே நீரை மிக மிக கவனமாக
செலவு செய்யுங்கள்

குழாயை திறந்து விட்டு ஒழு செய்வது பல் தேய்ப்பது நிறுத்துங்கள் மக் கில் தேவையானதை பிடித்து வைத்து  செய்யுங்கள் வெயில் காலத்தில் 2 முறை குளியுங்கள் போதும்  அடிக்கடி குளிக்கிறேன் என வேஸ்ட் பண்ணாதீர்கள் பிளீஸ்..


நீரை பியூரி ஃபயர் பண்ணும் போது வெளியாகும்  நீரை கூட பிடித்து வைத்து நாங்கள் பாத்திரம் கழுவது அடுப்பு மேடை கழுவுவது போன்றவைகளுக்கு  யூஸ் பண்னுவோம் தொட்டி செடி தோட்ட செடி களுக்கு யூஸ் பண்ணலாம்.




துணி அலசிய நீரை கூட வேஸ்ட் பண்ணாமல் பக்கெட்களில் பிடித்து வைத்து வெஸ்டர்ன் டாய்லட் களில்  ஃபிளஷ்  செய்ய பயன் படுத்தலாம்.

குடிக்க டம்ளரில் நீர் எடுத்தால்... மிச்சம் இருக்கும் யாருக்காவது வீட்டுக்கு வருகிறவர்கள் நீர் குடிக்க கேட்டால் மீதம் இருந்தால் அதை ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி வைத்து உபயோகிங்கள்.. பிள்ளைகள் ஸ்கூலுக்கு  கொண்டு போய் விட்டு வரும் பாட்டில்களில்
மீதம் இருப்பதை கூட கீழே கொட்ட வேணாம் வேறு ஏதாவது ஒன்றுக்கு நிச்சயம்  பயன்படும்..

பைக் கார் வீடு முதலியவைகளை  துணி நனைத்து துடையுங்கள் கழுவி விட வேணாம்..

குழந்தைகள் குழாய்களை திறந்து விளையாட  அனுமதிக்காதீர்கள்  அவர்களுக்கு எட்டும் அளவு 
இனிமேல் குழாய்களை  பொறுத்தாதீர்கள் பிள்ளைகளுக்கு தண்ணீர் சிக்கனம்  பற்றி  கதைகள்  போல் சொல்லி சொல்லி  புரிய வையுங்கள் குழந்தைகளை தானாக குளிக்க பழக்குகிறோம்  என
நீரை அள்ளி. அள்ளி கொட்டுவதை தவிர்க்கவும் சொல்லி கொடுங்கள் கிட்டேயே நின்று  நீரை சிக்கனமாக குளிக்க வைக்க பழக்கி விடுங்கள்

ஏசியில் இருந்து சொட்டும் நீரை  பக்கெட்டில் பிடித்து வைத்து செடிகளுக்கு ஊற்றுங்கள் உங்களிடம் செடிகள் இல்லை என்றால் பக்கத்து வீடு இருந்தால் அவர்களுக்கு தேவை  பட்டால் கொடுங்கள் வீட்டில் பால்கனி இருந்தால் அவசியம் செடி வளருங்கள்...

திருமணம் போன்ற விழாக்களில் தண்ணீர் பாட்டில் சப்ளை பண்ணுவதும் பாதி குடித்து விட்டு ஸ்டைலாக மீதியை அப்படியே இலையில்  வைத்து விட்டு போவதும் மிக  மிக கெட்டது

டம்ளரில்  கொஞ்சமாக நீர் வைக்கும் பழைய முறையை தயவு செய்து வழமைக்கு கொண்டு வாருங்கள்  மொட்டை மாடியை அடிக்கடி பெருக்கி சுத்த மாக வைத்து கொண்டால் ஒரு மழை பெய்தாலும் நீரை  சேமிக்கலாம்....

மழை நீரில் துணி துவைத்தால் புது துணி போல் ஆகும் நமது பழைய துணிகள்  சுத்தமான மழை நீரை பெரிய அண்டாவில் பிடித்து வைத்து  ஒரு இரும்பு கம்பியை நன்றாக காய வைத்து அதற்குள் விட்டு  எடுத்து விட்டால் அந்த நீரை 6 மாதம் கூட குடிக்க சமைக்க உபயோகிக்கலாம் சோறு வெள்ளை வெளேர் என்று இருக்கும்

வீடுகளில் மரம் செடி கொடி வளர்க்க வாய்ப்பு இல்லாதவர்கள் கூட வீட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீரை..சாக்கடையில் கலந்து வீணாக்குவதை  விட... வீட்டின் அருகில் கழிவு நீர் குழிகள் அமைத்து... அதனுள் விடலாம்.... அதாவது ஏலெட்டு கிணற்று உரைகளை...கொண்டு... சிறு கிணறு போல் அமைத்து..... அதனுள் விட்டால்...... பெரும்பான்மையான நீரை நிலம் உறிஞ்சி விடும்

ஆண்டிற்கொரு முறை அடியில் படிந்த கசடுகளை  அகற்றி விட்டால்.... தண்ணீர் தொடர்ந்து..... 
தடையின்றி பூமிக்குள் செல்லும்... இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும். முற்றிலும்  நீர் இல்லை எனும் நிலை ஏற்பட்டால் ஒழிய  நம் மக்கள் நீர் சிக்கனத்தை  பின் பற்ற மாட்டார்கள்

எனவே *நீர்* *இல்லை* என்பதை  முதலில்..... பெரிய அளவில்  அரசு.... விளம்பர படுத்தி.... 
மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்  
BY Shafiyath Qadiriyah
அதே போல ஹோட்டல் களில் தரும் நீரை பாதி குடித்து விட்டு வைத்து விட்டால் அதை அப்படியே கொட்டி விடுவார்கள் ஒரு சொம்பு அருகில் வைத்தால் வேண்டிய நீர் மட்டும் ஊற்றி குடிக்கலாம் வீண் ஆகாது... 

நாட்டு நல பணி திட்டத்தின் மூலம் மாணவர்களை அழைத்து சென்று நகருக்குள் இருக்கும் ஏரி குளங்களை சுத்தம்  செய்ய வைக்கலாம்...

http://mdfazlulilahi.blogspot.ae/2017/04/blog-post.html 



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.